ப்ரியமானவள் சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட புகைப்படம் - பீதியில் உறைந்த ரசிகர்கள்..! - ஆத்தாடி..!
பிரபல மலையாள நடிகை பிரவீனா. இவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள கரமனையில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வீட்டில் குடும்பதினருடன் பொழுதை கழித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்குள் நல்ல பாம்பு குட்டி ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் திருவனந்தபுரம் உயிரியில் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து பாம்புபிடி நிபுணர்கள் வந்து அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தேடி பாம்பு குட்டியை கண்டுபிடித்தனர்.
அந்த பாம்புக்குட்டி பிறந்து 2 நாள் தான் ஆகியிருந்தது, அந்த குட்டியை பிரவீனா கையில் கொடுத்து அதை வீடியோ எடுத்துள்ளனர். முதலில் தயங்கிய அவர் பின்னர் துணிச்சலுடன் கையில் பிடித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி பாம்புபிடி நிபுணர்களின் செய்கையும், அதற்கு உடன்பட்ட நடிகை செயலும் தவறானது என்ற சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் பிரவீனாவின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள். பிடிபட்ட பாம்பு குட்டி பாம்பு என்பதால் அந்த பாம்பின் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் அங்க பகுதியில் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என நடுக்கத்தில் இருக்கிறாராம் பிரவீனா.