"லேட்நைட்-டில் போன் செய்து அது இருக்கான்னு கேட்பார்.." - சிம்பு மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்..!


நடிகர் ஜான் விஜய்தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான இவர் சமீபத்தில் தொகுப்பாளினி ஒருவரிடம் போனில் தகாத முறையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார். 
 
பிரபல தொகுப்பாளினி சிவரஞ்சனி தான் அந்த புகாரை கொடுத்தவர். நடிகர் ஜான் விஜய் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமாக பேசியாத கூறினார். அவர் கூறுகையில், நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். 
 
மேலும், அவர் விரும்பும் பெண்களையும் மோசமாக நடந்துகொள்ள வற்புறுத்தும் தவறான மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன் . ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். 
 
நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். நான் நாளை பேசுகிறேன் என்றேன். 
 

 
ஆனால், அவரோ தொலைபேசியில் மோசமாக பேச முற்பட்டார். மேலும் போனிலேயே உன்னுடன் உ ற வு கொள்ள வேண்டும் என்றார். நான் நிதானமாக, உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார். 
 
அதன்பின்னர் நிறைய பெண்களிடம் நான் ஜான் விஜய் குறித்து எச்சரித்திருக்கிறேன் என கூறியிருந்தார்.இதன் பிறகு,ஜான் விஜயின் மனைவிதொகுப்பாளினி சிவரஞ்சனி-யை தொடர்பு கொண்டு நான் அவரை பார்த்துக்கொள்கிறேன் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என கூறியதால் இந்த விவகாரம் அமுங்கி போனது.
 
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றி பேசிய ஜான் விஜய். வம்படியாக சிம்புவை இழுத்து தெருவில் விட்டுள்ளார்.பல ஆண்டுகள் கழித்து இப்போது தான் சிம்பு உடல் எடை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து சமத்து பிள்ளையாக இருக்கிறார். இந்நிலையில், ஜான் விஜயின் இந்த பேட்டி சிம்பு ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
 
அவர் கூறியதாவது, நான் ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு பார்ட்டிக்காக பல விதமான சரக்குகள் வரும். அப்போது சிம்பு தனக்கு போன் செய்து, ஏதாவது ஃபாரின் சரக்கு ஏதாவது கிடைக்குமா..? நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாமா..? என் கேட்டதாக கூறியுள்ளார்.
 
சிம்பு நண்பர் என்ற முறையில் என்று தன்னிடம் கேட்டதை இப்படிபொதுவெளியில் சொல்லித்தான் ஆக வேண்டுமா..? என்று ஜான் விஜய் மீது கடுப்பில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள்.
Powered by Blogger.