வசூலை வாரி குவிக்கும் "குடும்பஸ்தன்".... 7 நாளில் இத்தனை கோடியா?
நடிகர் மணிகண்டன்:
தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக பார்க்கப்படுபவர் தான் மணிகண்டன். மிகவும் சாதாரணமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் நடிகர் மணிகண்டன்.
அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறது .
ஆரம்ப கால வாழ்க்கை:
அப்படி அவருக்கு அந்த கதவு திறக்கவில்லை.ஆனால் தொடர்ந்து முயற்சியை கைவிட்டு விடாமல் ஸ்க்ரீன் டைரக்டர் ஆகவும் வசனகர்த்தாகவும் தனக்கு பிடித்த வேலைகளில் எல்லாம் கவனத்தை செலுத்தி கோலிவுடில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
திரை வாழ்க்கை;
அது அவருக்கு நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. அதன்படி விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனம் எழுதி அனைவரது கவனத்தை ஈர்த்தார். மிக அற்புதமான ஒரு வசனங்களை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை படத்தில் ஒரு சின்ன ரோலிலும் அவர் நடித்திருப்பார்.விக்ரம் வேதா வசனங்கள் எல்லாமே இன்று வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வசனங்களாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விசுவாசம் படத்துக்கும் மணிகண்டன் தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பஸ்தன்:
இப்படி மெகா ஹிட் அடித்த திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்து வந்த நடிகர் மணிகண்டன் இயக்குனராக "நரை எழுதும் சுயசரிதை"என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் சீன் மற்றும் வசனங்கள் எல்லாமே நம் மக்களின் கவனத்தை ஈர்த்ததாக பார்க்கப்பட்டது.கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த குட் நைட் என்ற திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது . குடும்பஸ்தன் திரைப்படமும் மக்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது.
மணிகண்டன் இப்படி பெரிய பிரபலம் ஆவதற்கு முன்னதாக ஒரு டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்று இருக்கிறார். அங்கு அவரிடம் 50 ரூபாய் கொடுத்து இனி இந்த பக்கமே வந்து விடக்கூடாது என அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.ஆனால், அந்த அசிங்கத்தை எல்லாம் தாங்கி சகித்துக் கொண்டு தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த மணிகண்டன் இன்று அனைவரும் வியந்து பார்க்கும் நபராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் வெறும் 7 நாட்களில் உலக அளவில் 11.5 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றியாக அவரது வாழ்நாளில் கருதப்படுகிறது. தொடர்ந்து மணிகண்டனுக்கு நல்ல திரைப்பட கதைகள் வாய்ப்புகளும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.