மீண்டும் ஒரு புது வீடு... யாருக்காக? அதீத வளர்ச்சி அடைந்த அனிதா சம்பத்!
செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய அனிதா சம்பத் பிரபலமான ஹீரோயின் ரேஞ்சிற்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். இவர் செய்தி தொகுப்பாளினியாக இருந்து வந்தபோது திடீரென சமூக வலைதளங்களில் இவரது வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார்.

இது தவிர அவர் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களை பணியாற்றி இருக்கிறார். "எமர்ஜென்சி" என்ற வலைத்தொடரிலும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனிடையே அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் திடீரென டிரெண்டானதால் அவர் மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒரே நைட்டில் பேசப்பட்டார்.
இதனிடையே தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்ற கிராபிக் டிசைனரை கடந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்ட அனிதா சம்பத் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் வாழ்வில் லட்சியங்களையும் கனவுகளையும் எட்டிப்பிடித்து தொடர்ந்து அதற்காக பயணித்து வருகிறார்.
அந்த பதிவில் அனிதா சம்பத் கூறியிருப்பதாவது நம்முடைய இரண்டாவது வீடு இது என்னுடைய அம்மாவுக்காக உங்க அன்பு இல்லாமல் எங்களுடைய வளர்ச்சி சாத்தியமே இல்லை எனக் கூறி ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.