சிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷுடன் அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'வடசென்னை' படம் நாளை வெளியாகிறது. இப்படத்திற்காக நடந்த பிரமோஷன் பேட்டி ஒன்றில் அவர் சிம்புவைப் பற்றிப் பேசியுள்ளார்.

அதில், “நானும் ஹவுசிங் போர்டுல பிறந்து வளர்ந்த பொன்னுதான். சென்னை, தி.நகர்ல சிம்பு வீட்டுக்கு எதிர்ல இருக்கிற ஹவுசிங் போர்டுலதான் என்னோட சின்ன வயசு கடந்து போனது. அப்போது, ஸ்கூல் விட்டு வரும் போது சிம்பு வீட்டு வழியாகத்தான் வருவோம். அப்பவே அவர் சீன் போடுவாரு. நாங்க எகிறி குதிச்சி, அவர் வீட்டுக்கா வருவோம். 

சைக்கிள் ஓட்டிக்கிட்டு, கிரிக்கெட் விளையாடிக்கிட்டு பயங்கரமா சீன் போடுவாரு. அவரைப் பார்த்த போது கூட சார், உங்க வீட்டுக்கு எதிர்லதான் நான் இருந்திருக்கேன்னு சொல்லியிருக்கேன்,” என்றார். 'வடசென்னை' படம் ரொம்ப முக்கியமான படமா இருக்கும். 

லிப்லாக் வந்து கூட படத்துல முகம் சுளிக்கிற மாதிரி இருக்காது. வயலன்ஸ் கூட பயங்கரமா இருக்காது. எல்லாரும் பார்க்கலாம்,” என்றும் ஐஸ்வர்யா கூறுகிறார். 'காக்கா முட்டை' படத்திற்குப் பிறகு 'வடசென்னை' ஐஸ்வர்யாவுக்கு பெரிய பெயரை பெற்றுத் தரும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்