அரசு பள்ளியைத் தத்தெடுத்த பிரணிதா.

நடிகை பிரணிதாவை ஞாபகம் இருக்கிறதா?. தமிழில் 'உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள்' ஆகிய படங்களில் நடித்தவர். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் ஒரு முக்கியமான விஷயத்தை செயல்படுத்தியிருக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் அவருடைய சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்திருக்கிறார். 

பெங்களூரு அருகில் உள்ள ஹசன் என்ற ஊரில் அந்த அரசுப் பள்ளி உள்ளது. முன்னணி நடிகைகள் சிலர் மக்களுக்குத் தேவையான சிலபல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அரசுப் பள்ளியை பிரணிதா தத்து எடுத்துள்ள விஷயத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு 'மீ டூ' என ஹேஷ்டேக் வைத்து பரபரப்பை ஏற்படுத்துவது போல, இது போன்ற நல்ல விஷயங்களுக்கும் 'மீ டூ' என பலரும் சேர்ந்தால் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகள் பலருக்கு கற்பித்தவலை வளர்த்த புண்ணியமாவது கிடைக்கும்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்