என்ன கன்றாவி இது..? - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
சித்திரம்பேசுதடி பட ஹீரோயின் பாவனா தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். 
 
2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் கன்னட படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
 
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் அனைவரும் மலையாள நடிகைகள் தான். அந்த வகையில் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளான அசின் நயன்தாரா கூட மலையாள நடிகைகள் தான்.
 
இதை தொடர்ந்து பாவனாவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி கலக்கியுள்ளார். இவர் திரை உலகில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயில் திரைப்படத்திலும் நடித்திருப்பார்.
 
மேலும் நடிகை பாவனா தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். அந்தவகையில் ஜெயம் ரவி உடன் தீபாவளி என்ற திரைப்படத்திலும். தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்திலும் பாவனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நமது நடிகைக்கு சில பல காரணங்களின் காரணமாக பட வாய்ப்பு திடீரென சறுக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திருமணம் பக்கம் ஆசை கொண்ட பாவனா தனது காதலனை மணமுடித்தார்.
 
திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட நடிகை பாவனா சமீபத்தில் தன்னுடைய க்யூட்டான புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட், புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி காம்பினேஷன் இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.