இந்தியன் 2 படத்தின் மூலம் முதன் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து முன்னணி காமெடி நடிகர்..!


இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்து வருகிறார்கள். 

படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அதனை சுற்றி காய் நகர்த்தும் உலக நாடுகளின் மறைமுக அரசியலை தோலுரிக்கும் விதமாக இருக்கும் என கூறுகிறார்கள்.


மேலும், விண்வெளி சம்பந்தமான காட்சிகளும் படத்தில் இடம் பெறவுள்ள இந்த படம் ஒரு ஸ்பேஸ்-திரில்லர் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 


இந்நிலையில், இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் இணைந்துள்ளார். கமல்ஹாசன் - விவேக் இணையும் முதல் படம் இது. ஏற்கனவே, "பார்த்தாலே பரவசம்" என்ற கமல் படத்தில் விவேக் நடித்துள்ளார். 

ஆனால், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. விவேக் தனி ட்ராக்கிலும், கமல் தனி ட்ராக்கிலும் தான் நடித்தனர். இருவரும் இணைந்து நடிப்பது போல ஒரு காட்சி கூட இல்லை என்பது குறிப்பிடதக்கது. 

முன்னதாக, விவேக் கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபுவை நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு காமெடி நடிகர் சில சீரியஸான காட்சிகளிலும் நடிக்க வேண்டும். ஒரு வேளை யோகி பாடு அப்படியான சீரியஸான காட்சிகளில் நடித்தால் அந்த காட்சியின் தன்மை மாறிவிடும் என்பதால் விவேக்-கை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்கள். 

காரணம், காமெடியில் விவேக் கலக்கினாலும் சீரியஸான காட்சிகளை சீரியசாகவே கொண்டு செல்வார். இதே போல தான் சிவாஜி படத்தில் வடிவேலு நடிக்கவிருந்த காமெடி கதாபாத்திரத்தையும் விவேக்கிற்கு கொடுத்தார்கள். ஆனால், ரஜினியின் நகைச்சுவை வடிவேலு ஓவர் டேக் செய்து விடுவார் என்று தான் விவேக்-கிற்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்ற பேச்சும் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
Powered by Blogger.