சுதந்திர தினம் - சற்று முன் இந்தியன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் ஷங்கர்..! - இதோ மாஸ் போஸ்டர்
கமல் திரையுலகுக்கு வந்து இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் கமல்- ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள்.
இசை - அனிருத் .இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 தொடங்கியது என்கிற விடியோவுடன் கூடிய அறிவிப்பைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசியக்ர்களுக்கு சுதந்திர வாழ்த்துக்களுடன் இந்தியன் 2 படத்தில் கமலின் கெட்டப்பை வெளியிட்டுள்ளார் ஷங்கர். இந்தியன் படத்தில் இருந்த அதே மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.