பிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் இவர் தான் - அறிவித்தது தொலைகாட்சி நிறுவனம்
பிக்பாஸ் மூன்றாவது சீசன் 88 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. பிக்பாஸ் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொடர்ந்து மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நான்காவது சீசனனுக்கு கமலுக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என செய்தி பரவியது. சிம்பு, சூர்யா, மாதவன் போன்ற பல நடிகர்களின் பெயர்களும் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்தியில் 13வது சீசனாக பிக்பாஸ் நடந்து வருகிறது. தமிழில் தற்போது மூன்றாவது சீசன் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த மூன்று சீசன்களையுமே கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில், நான்காவது சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் சமீபத்தில் வைரலானது.
கமலுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என அதில் கூறப்பட்டிருந்தது. அதோடு, கமலுக்குப் பதில், சிம்பு, சூர்யா, மாதவன் அல்லது அரவிந்த்சாமி என பலரது பெயர் அடிபட்டது.
ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது. அடுத்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என விஜய் டிவி தரப்பு தெரிவிக்கிறது.