கமல் பேமிலி போட்டோ மூலம் பிரபலமான பூஜா குமார் - அவரை பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!


நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோரை பற்றி அவ்வபோது அரசல் புரசல் செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், அவை பெரிதாக எந்த கவனமும் பெறவில்லை. 

ஆனால், சமீபத்தில் கமல்ஹாசனின் குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார் இடம் பெற்ற விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார்களா..? என்று பேசினார்கள். 

மேலும், சமீபத்தில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள பாலசந்தர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்றார் பூஜாகுமார்.அப்போது, கமல் மற்றும் ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.


இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கமலை பாராட்டி தள்ளியிருக்கிறார் பூஜா குமார். கமல் சாருடன் 5 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். கமல் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமான மனிதர். 

தாய் வீடு போல தாய் வீடு போல ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு தாய் வீடு போல. கமலைப் போல ஒரு கடுமையான உழைப்பாளியை பார்ப்பது கஷ்டம். ஒரே சமயத்துல பல வேலைகளை செய்வது பெரிது அல்ல. 


ஆனால் எடுக்கும் எல்லா வேலையையும் சிறப்பாக செய்யக்கூடியவர். அரசியல், சினிமா, டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயம் அல்ல. எனக்கு கமல் சாரை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. 

எனக்கு பொறுமையை கற்றுக் கொடுத்தது கமல் சார்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்து போராடுவார். சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார் என கமல்ஹாசனை பற்றி புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளியுள்ளார் அம்மணி.
Powered by Blogger.