ரஜினி-கமல் கூட்டணி சேர்ந்தால் முதல்வர் வேட்பாளர் யார்? - புகைச்சலை கிளப்பிய நடிகை..!


தமிழகத்தின் இரண்டு முன்னணி தலைவர்கள் காலத்தின் பிடியில் சிக்கி விட்ட நிலையில், அரசியலில்தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் நாற்காழியை போட்டு அமர்வதற்கு பலரும் முயன்று வரும் நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தும் முயற்சி செய்து வருகிறார்கள். 

அந்த வகையில், இருவரும் தனித்தனியே கட்சி தொடங்குவது என முடிவு செய்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கி விட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த்இன்னும் கட்சி எதுவும் தொடங்காமல் காலத்தை ஓட்டி வருகிறார்.

ஆனால், கட்சி தொடங்குவது உறுதி என்பதையும், 2021 தேர்தலில் களம் காணுவேன் என்றும் ஆணித்தரமாக கூறி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கமல் 60 விழாவில் கமல்ஹாசனுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி அமைப்போம் என்று ரஜினிகாந்த் கூறியது அரசியல் நோக்கர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கும் நடிகை ஸ்ரீப்ரியா, ஒரு வேளை கமல்,ரஜினி கூட்டணி அமைந்தால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி புகைச்சலை கிளப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ்மூலம் பிரபலமான சினேகன் " ரஜினி, கமல் ஆகியோர் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்காகவே அரசியலுக்கு வருகிறார்கள் " என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.