மற்றொரு ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிகர் விஜய் - பிரம்மாண்ட இயக்குனருடன் கூட்டணி..!


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மற்றொரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிகின்றன. ஆம், நடிகர் அர்ஜுன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் விஜய் பச்சை கொடி காட்டியுள்ளாராம்.

ஏற்கனவே, விஜய் , ஷங்கர் கூட்டணி குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் முதல்வன் இரண்டாம் பாகத்தில் தான் இருவரும் இணைய போகிறார்கள் என்ற செய்தி மாஸ்டர் ரிலீஸ் ஒத்திவைப்பால் சோகத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இந்த படத்தை கைப்பற்ற லைகா மற்றும் சன் பிக்சர்ஸ் என இரண்டு நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு வருகின்றன என்று கூறுகிறார்கள். இரண்டு தயாரிப்பு தரப்புமே ஷங்கருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் ஷங்கர்.

ஏற்கனவே, இந்தியன் 2 படம் ஆரம்பித்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருகின்றது. படம் ட்ராப் ஆகி விட்டது என்று கூட தகவல்கள் வந்தன. ஒரு வேளை, இந்தியன் 2 படம் ட்ராப் ஆனால் லைகா நிறுவனமே முதல்வன் 2 படத்தை தயாரிக்கும் வாய்பை பெரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Powered by Blogger.