ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு - தவற விட்ட விஜய் - அதுவும், எந்த படம்ன்னு தெரிஞ்சா ஃபீல் பண்ணுவீங்க..!


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். அதே அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். வெறித்தனமான ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கிங் என்றால் அது விஜய் ரசிகர்கள் தான்.

இவருடைய படங்களில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதில் தொடங்கி, டீசர், பாடல்கள், படம் என ஒவ்வொன்றாக கொண்டாடி தீர்ப்பார்கள். பொதுவாக, முன்னனியில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று பொதுவான ரசிகர்கள் விரும்புவார்கள்.

ஆனால், அப்படி இணைந்து நடிப்பது சாத்தியம் என்றாலும், தயாரிக்க யாரும் முன் வர மாட்டார்கள். காரணம், இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தால் அவர்களது சம்பளமே பல கோடிகளை தாண்டும். உதாரணத்திற்கு, அஜித், விஜய் என இரண்டு நடிகர்களை வைத்து படம் எடுத்தால் அவர்களது சம்பளமே 100 கோடியை தாண்டும். ஆனால், படத்தின் வசூல் ஒன்று தான்.

அதே தயாரிப்பாளர் தனி தனியாக இரண்டு படங்கள் எடுத்தால் இரண்டு வசூல். லபாமும் அதிகம். இதனால்,இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பது எல்லாம் தயாரிப்பாளர்கள் மனசு வைத்தால் தான் முடியும்.

ஆனால், நடிகர் விஜய் அவர்கள் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்பை தவற விட்டுள்ளார் விஜய்.

ஆம், படையப்பா படத்தில் நடிகர் ரஜினின் மகள் காதலிக்கும்அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், அப்போது இருந்த கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் தவிர்த்திருக்கிறார் தளபதி.
Powered by Blogger.