நமீதாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!

80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகளில் ராதாவும், அம்பிகாவும் ஆகும். அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றவர்கள். 
 
அம்பிகா மற்றும் ராதா தங்களது சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றனர். 
 
இளம் வயதில் இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
 

நடிகை ராதா நாயர் அவரது அக்கா அம்பிகாவுடன் சிறு வயது புகைப்படம். 

நடிகை அம்பிகா சினு ஜான் என்பவரை 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 1998-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின், ரவிகாந்த் என்பவரை 2000-ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிறகு 2003-ம் அவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

கணவருடன் ராதாவின் திருமண புகைப்படம்:

இவருடைய கணவர் பெயர் ராஜசேகரன் நாயர். இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரண்டு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
ஆரம்பத்தில் ஃபிட்டாக இருந்த ராதா சமீப காலமாக மிகவும் குண்டாகி விட்டார். தற்போது தொலைகாட்சி நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், தொழிலதிபராகவும் திகழ்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் நமீதாவையே ஓவர் டேக் பண்ணிட்டீங்க மேடம் என்று கூறி வருகிறார்கள்.
Powered by Blogger.