பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தளபதி விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ்கண்ணா மற்றும் தேவயானி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரண்ட்ஸ். 
 
இத்திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. பிரண்ட்ஸ் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளியானது.இந்த திரைப்படம் மலையாள படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது.இந்த திரைப்படத்தில் தேவயானி,ரமேஷ்கண்ணா, ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
 
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.தளபதி விஜய்க்கு ஜோடியாக தேவயானியும் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் முதல் பாகம் மிகவும் கலகலப்பாக சென்றாலும் இரண்டாவது பாகத்தில் பாசம், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 
 
ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி கதாபாத்திரத்தை நம்மால் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. வெளியான சமயத்தில் இந்த படத்தின் பாடல்கள் பயங்கரமாக ஹிட்டடித்தது.இந்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானிக்கு பதிலாக ஜோதிகாவும் விஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தில் சுவலக்ஷ்மியும் முதலில் நடிக்க வேண்டியதாக இருந்தது.
 
ஆனால் பின்னரே நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் முதன் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, சூர்யாவுக்கு ஜோடியாக சுவலட்சுமி ஆகிய இருவருமே ஒப்பந்தம் செய்யப்பட்டனர். போட்டோ ஷூட் கூட நடந்தது.இந்நிலையில் திடீரென எந்தவித காரணமும் இல்லாமல் ஜோதிகா விஜய் படத்திலிருந்து விலகினார். 
 
 
அதன் பிறகுதான் படக்குழு தேவயானியை ஒப்பந்தம் செய்தது. அதேபோல் சூர்யாவின் ஜோடியாக நடித்த சுவலட்சுமி என்பவரையும் மாற்றி விட்டனர். ஒரு காலத்தில் சுவலட்சுமி இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இந்தியாவின் அனைத்து மொழிப் படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.ஆனால் விஜய் ஜோதிகா ஏற்கனவே இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருந்தனர். 
 

இந்த படம் ஜோதிகாவின் சினிமா கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி முக்கிய நாயகியாக வலம் வர வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் ஜோதிகா நடித்த படங்களிலேயே குஷி தான் ஜோதிகாவுக்கு பிடிக்காத படம் என அவரது இயக்குனர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Powered by Blogger.