"என்னுடைய உடலுறவுக்கு விலை வைக்கதிங்க.." - நடிகர் கமல்ஹாசனை விளாசிய ஜெயம்ரவி பட நடிகை..!


ஹிந்தி திரையுலகின் மிகவும் துணிச்சலான நடிகைகளில் கங்கனா ரனாவத் மிக முக்கியமானவர். தனது மனதில் படும் கருத்துக்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களின் மூலம் வெளிப்படுத்தி விடுவார்.தமிழில், ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
 
தற்போதும் அவர் அப்படிப்பட்ட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். 
 
கமல்ஹாசனின் கருத்தை பாராட்டி காங்கிரசின் சஷி தரூர் வெளியிட்ட ட்வீட்டுக்கு கங்கனா அதிரடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார். குடும்ப தலைவி, இல்லத்தரசிகளான நாங்கக் எங்கள் அன்புக்குரியவரோடு கொள்ளும் உடலுறவுக்கு விலையோ, ஊதியமே வைக்காதீர்கள்.
 
எங்கள் தாய்மைக்கு விலை நிர்ணயம் செய்ய நீங்கள் யார்..? எங்கள் சொந்த சிறிய ராஜ்யத்தின் ராணிகளாக இருப்பதற்கு எங்களுக்கு சம்பளம் தேவையில்லை. 
 
 
எல்லாவற்றையும் வியாபாரமாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் பெண்ணிடம் சரணடையுங்கள். உங்களை முழுமையாக அவள் எதிர்பார்க்கிறாள். 
 
உங்கள் அன்பு, மரியாதை, சம்பளம் மட்டும் தனித்தனியாக அவளுக்கு தேவையல்ல என்று கங்கனா ரனாவத் ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. சஷி தரூரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனாவின் ட்வீட் செய்துள்ளார். 
 
இதுகுறித்து சஷி தரூர் தனது ட்வீட்டில், "வீட்டு வேலைகளை சம்பளத் தொழிலாக அங்கீகரிக்கும் @iKamalhaasan உடைய யோசனையை நான் வரவேற்கிறேன். வீட்டு இல்லத்தரசிகளுக்கு மாநில அரசு மாத ஊதியம் கொடுக்கும். இது சமுதாயத்தில் உள்ள பெண்களின் சேவைகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஊதியம் அளிக்கும் வகையில் இருக்கும். 
 
இது அவர்களது சக்தி மற்றும் சுய மரியாதையை மேம்படுத்தி உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு நிகரான சூழலை உருவாக்கும்” என்று கூறி இருந்தார்.ஆனால், பெண்ணியம்.. பெண் விடுதலை என்ற போர்வையில் இது போன்ற கிருக்குத்தன்மான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்காதீர்கள் என்று பல பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Powered by Blogger.