"பிரபு-வை பிரிந்தது ஏன்..?.." - குஷ்பு கொடுத்த அதிரடி பதிலை பாருங்க..!


நடிகை குஷ்பூ, ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ் காட்டியவர் இன்றளவும் நடிகை குஷ்பு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் தான் அவருடைய நடிப்பும் சரி, அவருடைய நடனமும் சரி அனைத்திலுமே இன்றளவும் ஒரு கலக்கல் செய்து வருகிறார். 
 
நடிகை குஷ்பூ, பிரபுடன் மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்தவர். 
 
2000 ஆம் ஆண்டுகளில் நடிகை குஷ்பூ மற்றும் பிரபு காதலித்து வருவதாகவும், ஆனால் சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அவர்களது காதல் திருமணத்தில் முடியவில்லை என கிசு கிசுக்கப்பட்டது பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துக்கொண்டார் குஷ்பூ. 
 
 
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ, பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
 
அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பூ தெரிவித்து உள்ளார் குஷ்பு சுந்தர் சி என்ற உறவு தான் என்றும் நிலையானது மற்றும் இதனை யாராலும் பிரிக்கவும் முடியாது. 
 
பிரபுவை பிரிந்தது ஏன்..? என்ற கேள்விக்கு, இந்த தருணத்தில் பிரபு உடனான உறவை பற்றி பேசி தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கும் அவரை பற்றி பேசி வீணாக சங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கிறன்..எனக்கும் 18 வயதில் மகள் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார். 


 
மேலும், சுந்தர் சி பற்றி, "என்னிடம் சுந்தர் சி அவருடைய காதலை பற்றி தெரிவிக்கும் போது திருமணத்தை மனதில் வைத்து தான் பேசினார். அது எனக்கு பிடித்து இருந்தது. 
 
அதே வேளையில், என்னை வாழ வைப்பதற்காக தேவையான அனைத்தும் செய்து வைத்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்து இருந்தார் பின்னர் தான் 1999 ஆம் ஆண்டு மிக அழகான ஒரு வீட்டை கட்டினார். 
 
பின்னர் தான் 2000 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெற்றது என தெரிவித்து உள்ளார்
Powered by Blogger.