"ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டியான உடையை கொடுத்து..." - வெளிப்படையாக போட்டு உடைத்து நீலு ஆண்ட்டி..!


சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகைகளும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் சில நமிட காட்சிகள் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இதில், சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்ட்டி இரண்டாவது ரகம். 
 
2011-ஆம் ஆண்டு “சிங்கம்புலி” படத்தில் நடிகர் ஜீவா ஒரு ஆண்டியுடன் பலான காட்சி நடித்திருந்தார். இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு. பலரும் இவர் சிங்கம் புலி படத்தில்மட்டும் தான் நடித்துள்ளார் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது “சிங்கம்புலி” திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி மோசமாக அமைக்கப்பட்டிருந்தது என்று வருத்தப்பட்டார். 
 
 
இதனை தொடர்ந்து சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய நீலு ஆண்ட்டி, சில நேரங்களில் படப்பிடிப்புக்காக வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும், துணை நடிகைகள் எல்லாம் ஒரு வேன் அல்லது பஸ் ஏற்பாடு செய்து அதில் பயணிப்போம். சில நேரங்களில் 10 மணி நேரம், 20 மணி நேரம் கூட பயணம் இருக்கும். அப்படி பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து அணிந்து கொண்டு வர சொல்லுவார்கள். 
 
ஆனால், என்ன ஷாட் என்று சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். கேட்கவும் முடியாது. இந்த உடைகளை அணிந்து தான் நடிக்க வேண்டும் அல்லது நடனமாட வேண்டும் என்று கேட்பார்கள். முடியாது என்பவர்கள் யூனிட்டை விட்டு கெளம்புங்க என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். 
 
 
நிஜமாகவே நடிக்க முடியாது திரும்ப சென்று விடுவார்கள். ஆனால், பல நூறு கிலோ மீட்டர் பயணித்து வந்தவர்கள், கடுமையான பண நெருக்கடியில் உள்ள நடிகைகள் வேறு வழி இல்லாமல் அணிந்து கொண்டு நடிப்பார்கள். அவற்றை விரும்பி அணிந்து நடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். 
 
ஆனால், விருப்பம் இல்லாமல், பல்லை கடித்துக்கொண்டு நடிகைகளும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தால் தங்குவதற்கு முறையான வசதிகள் இருக்காது, உடை மாற்ற கூட வசதிகள் இருக்காது. 
 
வேன்,பஸ் என கிடைத்த இடத்தில் உடை மாற்றிக்கொள்வோம். சில சமயம் ஹீரோயின்களின் கேரவேனில் உடை மாற்றுங்கள் என்பார்கள். சரி, என்று சென்றால் இங்கெல்லாம் வரக்கூடாது என ஹீரோயின்கள் முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விடுவார்கள்.
 
எல்லா ஹீரோயின்களும் அப்படி இல்லை, சில ஹீரோயின்கள் பெருந்தன்மையாக அனுமதி கொடுப்பார்கள். இப்படி துணை நடிகைகளின் மறுபக்கத்தை பற்றி பேசியுள்ளார் நீலு ஆண்ட்டி.
Powered by Blogger.