"நீச்சல் உடையில்.. படு கிளாமராக.." புன்னகையரசி சினேகா...! - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என பல்வேறு பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.
இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம். அந்த வகையில் விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லட்சம் வரை வாங்குகிறாராம்.
அதேபோல் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை வாங்குவதாக செய்திகள் வந்துள்ளன. சினேகா சினிமாவுக்கு வந்த புதிதில் நீச்சலுடையில் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
என்பதே பலருக்கும் தெரியாது. தற்போது சினேகா மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அவருடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.