ஆப்பிள் பழம் போல பளபளன்னு மின்னும் ராஷி கண்ணா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 
நடிகை ராஷி கண்ணா, இளம் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வெள்ளை நிற சேலையில் அழகு பொங்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு கிக் ஏற செய்துள்ளார். 
 
நடிகை ராஷி கண்ணாவிற்கு அறிமுக திரைப்படம் ஹிந்தியில் என்றாலும், இவருக்கு நடிகை என்கிற அட்ரஸ் கொடுத்தது, தெலுங்கு திரைப்படங்கள் தான். ஹிந்தி பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு கை கொடுக்காததால், தேடி வந்த தெலுங்கு பட வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார். 
 
நடிகர் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மனம்' திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து, அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார். பின்னர், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளிலும் இவருடைய கவனம் சென்றது. 
 
 
தமிழில் நடிகை நயன்தாரா - விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை3 நடித்திருந்த அந்த படம் கலகலப்பான ஹாரர் திரைப்படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 
 
 
நடிகர் ஆர்யா இந்த படத்தில் வித்தியாசமாக பேயாக நடித்து இருந்தார். நடிப்பு கவர்ச்சி காமெடி என அனைத்திலும் கலக்கிய ராஷி கண்ணா இந்த படத்தில் ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெற்றார் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக ராஷி கண்ணா இணைந்துள்ளார். 
 
 
தி ஃபேமிலி வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்ததாக இந்தியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வெப் சீரிஸில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
 
 
யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் திருச்சிற்றம்பலம். கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
Powered by Blogger.