ஏன் காதலன்/காதலி - கணவன்/மனைவி பெயரை பச்சை குத்தகூடாது..? - இதோ காரணம்..!


சமீபகாலமாக இளசுகளிடம் பச்சை குத்துதல் எனப்படும் டாட்டு கலாச்சாரம் பெருகி வருகின்றது. அவரவர்கள் தங்களுக்கு பிடித்த சின்னங்கள், கடவுள் உருவங்கள், மத அடையாளங்கள், கார்டூன் பொம்மைகள் என பச்சை குத்திக்கொள்கிறார்கள். 

அதே சமயம், காதலன் பெயர், காதலியின் பெயர், கணவர் பெயர், மனைவியின் பெயர் எனவும் பலரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள். நாம் நேசிப்பவர் பெயர் அல்லது கணவன், மனைவி பெயரை பச்சை குத்திக்கொண்டால் அவர்கள் பிரிந்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை சமீப காலமாக பரவி வருகின்றது. 

அது எந்த அளவுக்கு உண்மை என்று ஒரு விசாரனையை முடுக்கி விட்டோம். அதில் கிடைத்த பதில்கள் நமக்கு திகைப்பை தருவதாகவே அமைந்திருந்தன. காரணம், பெரும்பாலானோர் நேசிபவர்களின் பெயர்களை பச்சை குத்திகொண்டால் அவர்கள் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். 


காதலனோ, காதலியோ, கணவனோ, மனைவியோ இருவரும் பரஸ்பரம் ஒருவர் பெயரை ஒருவர் மாற்றி மாற்றி பச்சை குத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால், ஆர்வ மிகுதியால் யாரவது ஒருவர் மட்டும் தான் நேசிபவரின் பெயரை பச்சை குத்திக்கொண்டால் அங்கேயே பிரச்சனை ஆரம்பித்து விடும் என்கிறார்கள். 

ஆம், உதரணமாக காதலியின் பெயரை காதலன் பச்சை குத்திக்கொள்கிறார் என்றால் காதலி தனது காதலனை நினைத்து பெருமை படுவாள். என்னுடைய பெயரை பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு என்னை நேசிக்கிறார் என்னுடைய காதலன் என்று பூரிப்படைவார்.

ஆனால், அந்த பூரிப்பு எத்தனை நாளைக்கு..? என்று யாருக்கும் தெரியாது. முதற்கட்டமாக, ஏதேனும் சிறு பிரச்சனை வந்தால் காதலியின் அல்லது மனைவியின் பெயரை நாம் பச்சை குத்தியுள்ளோம். ஆனால், அவள் நம்முடைய பெயரை பச்சை குத்திக்கொள்ளவில்லையே..? என்ற எண்ணம் தோன்றும்.

அவளது சூழ்நிலையாக இருக்கும் என முதல் முறை நம்முடைய மனது நம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கும். ஆனால், அடுத்தடுத்த பிரச்சனைகள் இவளது பெயரையா உடம்பில் பச்சை குத்தியுள்ளோம்..? என்ற என்ன ஓட்டத்தை கொடுக்கும். அதுவே காதல் அல்லது திருமண வாழ்வை கெடுக்கும். நாம் தான் அவளை உண்மையாக நேசிக்கிறோம்..? ஆனால், அவள் நம்மை நேசிக்கவில்லை போல இருக்கிறது என்ற தாழ்வு மனப்பான்மை வரும். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும், இதே விஷயம் இன்னொரு விதத்திலும் விளையாட வழியுள்ளது. ஆம், அதே காதலி, நம்முடைய பெயரை பச்சையே குத்தி விட்டான். இனிமேல் வேறு பெண் என்ற நினைப்பு கூட அவனுக்கு வர வாய்ப்பில்லை என்ற உச்சகட்ட அதிகாரத்தை, கோபத்தை உங்கள் மீது செலுத்த வாய்ப்புள்ளது. பிரிந்து விடலாம் என்று நீங்கள் எண்ணினால் கூட அந்த டாட்டு உங்களை தடுக்கும். 

ஏனென்றால், அவரை பிரிந்து நீங்கள் வேறு பெண்ணை காதலிக்க துணிந்தால் நிலைமை என்னவாகும்..? உங்கள் டாட்டுவை எத்தனை நாட்கள் மறைத்து வைத்திருக்க முடியும்...?? வாழ்வு சிதைந்து விடும். 

நீங்கள் கேட்கலாம், ஒரு காதலன் அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருத்தியின் பெயரை பச்சை குத்திக்கொள்வது தவறா..? அப்படியெல்லாம் காதலி எந்த பிரச்னையும் செய்ய மாட்டால் என்று. 

ஆனால், மனம் ஒரு குரங்கு என்று மகான்கள் கூறிய விஷயத்தை நீங்கள் மறந்து விட கூடாது. உயிருக்கும் மேல் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துக்கொள்ளலாம். பாசத்தை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால், அது நீடித்து இருப்பது தான் இங்கு விஷயமே.


இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவருக்கு ஒரு பயம் இருக்க வேண்டும். காதலன், காதலியாக இருந்தாலும் சரி. கணவன் மனைவியாக இருந்தாலும் சரி. நான் அவள்/அவன் விரும்பாத விஷயத்தை செய்தால் நிச்சயம் நம்மை பிரிந்து விடுவார் என்ற பயம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு அவரோ, அவருக்கு நானோ அடிமை அல்ல என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

அந்த பயம் தான் இருவரையும் பிரியாமல் பார்த்துக்கொள்ளும் காவலன். நான் என்ன செய்தாலும் அவன்/அவள் விட்டுக்கொடுத்து போய்விடுவார் என்ற எண்ணம் இருந்தால் அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்பது தான் உண்மை. நிதர்சனமும் கூட. 

அதனால், காதலிப்போம். கடைசி வரை. உரிமையாக சண்டை போடுவோம் எல்லை மீறாமல்.
Powered by Blogger.